மத்தியான வேளையிலே
மரம்பூத்த சாலையிலே
மனிதரற்ற நேரத்திலே
மழைகொள்ளும் சுகம் துறந்தால்
மனிதனாகி என்ன பயன்?
*****
ஆடி மாத முதல் மழையில்
அங்கம் அது நனைவதனை
அணுஅணுவாய் ரசிக்காமல்
அணில்குஞ்சாய் ஒதுங்கிநின்றால்
அறிவிருந்து என்ன பயன்?
*****
மழைத்துளிகள் முகம்கொள்ள
மழைசாரல் மனம்கொள்ள
மகிழ்ச்சியிலே உடல்துள்ள
மறுத்துவிட்டு மறைந்து நின்றால்
மனசிருந்து என்ன பயன்?
3 comments:
வரவேற்கிறோம் புதுக் கவிஞனை வலைப்பூக்கள் உலகத்திற்கு
அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://www.jackpoem.blogspot.com/
Thanks
தோழர் சதீஷ் அவர்களுக்கு ,
உங்களது இந்த கவிதை நன்றாக இருக்கிறது.
இயந்திரமாகிவிட்ட வாழ்கையில்
மனிதன் மறந்து விட்ட
கணங்கள், கவிதையாய் மலர்ந்து இருக்கிறது.
ஆனால், அந்த தருணகளை சற்று , தங்களது
கவிதையில் நீடித்து இருக்கலாம் என்பது
என் கருத்து.
Post a Comment