நானோர் பறவை
சுதந்திரமாய் சிறகுவிரித்து
பறக்கத்துடிக்கும் பறவை*****
மிக நீண்ட சிறகுகளுண்டு
என்னிடம்
கிரணங்களை தடுத்து
கிரகணங்களை உருவாக்கிகிரகங்களை கடந்து, எனை
அழைத்துச்செல்லும்
வலிமையுள்ள சிறகுகள்
பறத்தலின்
பரிணாமங்களையும்பரிமாணங்களையும்
படித்து பதியமிட்டு
பயிற்சி செய்த
பழக்கமுமுண்டு
எனினும்,
எதேச்சையாய் சிறகுயர்த்த
எத்தனிக்கையிலெல்லாம்ஏனோ மறந்துபோகிறேன்
என்
கால்களை பிணைத்திருக்கும்கற்பாறைகளை
*****
சடசடத்தபடி
நின்ற இடத்திலேயே
நின்றபடிநின்றுகொண்டிருக்கிறேன்
நானே விரும்பி
பிணைத்துக்கொண்ட பாறையின்மேல்
விடுபட முயலாமலும்
விடுபட முடியாமலும்