இறப்பை நோக்கி
சென்றுகொண்டு இருந்தான் - அவன்!
குருதி - அவனை
குளிப்பாட்ட தயாராக
உத்திர துவங்கி விட்டிருந்தது!
சட்டென்று ஏற்பட்ட ஒரு
சாலை விபத்தில்
மரணத்தில் இருந்து விடுபட
மன்றாடிக்கொண்டு இருந்தான்!
அவன்
உயிர்பயம் தெளிகையில்
தெய்வமாய் தெரிந்தவன்
மருத்துவனல்லன்
முகம் தெரியாத யாரோ?
தன் குருதி தந்து
உயிர் தந்தவன்
உரு காட்டாமல் சென்றுவிட்டான்.
ரத்த தானம் நன்று!
*****
ரத்தம், எலும்பு மஜ்ஜை, சதை
இவைகளுக்கெல்லாம் - ஒரு
இயல்பு உண்டு.
தானம் செய்தபின்னும்
அவைகளை நாம் இழப்பதில்லை.
இழந்ததை அவைகளே
ஈட்டி விடுகின்றன
இரண்டாவது சிருநீரகம்
ஒரு தற்காப்பு..
அது அத்தனை அவசியமல்ல
அறிவேன்.
எனில்...
தானத்தில் சிறந்தது?
இழந்தால் கிடைக்காத
விழியும் இதயமும்.
****
எனக்கும் உடன்பாடுதான்
என்
உடலுறுப்புக்கள் அத்தனையையும்
தானம் செய்ய..
இதயம் தவிர.
ஏனெனில்
என்னுடையதை மட்டும் தானே
என்னால்
தானம் செய்ய முடியும்??
3 comments:
Excellent thoughts... Much appreciated.
I admire your Last stanza.. Hope the owner is only one person...
அன்பின் சதீஷ்
நல்ல கவிதை நல்ல சிந்தனை தானத்தின் மகிமையை விளக்கும் கவிதை
இறுதியில் நகைச்சுவை - இதயம் ஏற்கனவே ஒருத்திக்குச் சொந்தமானதென்று - எதிர்பாரா முடிவு தேவைதான் - இருப்பினும் கவிதையின் கரு மாறுகிறதே - தானத்தின் மகிமையினை விளக்கும் கவிதை திசை மாறுகிறதே
நல்வாழ்த்துகள்
இந்த கவிதையின்
கரு - தானம் ,
சிந்திக்க வைக்கும்
படிப்பவர்களை.
Post a Comment