Sunday, February 28, 2010

நசிந்த நம்பிக்கைகள்!

வாழ்வை ரசித்தது ஒரு காலம்
வசந்தம் தேடியது ஒரு காலம்
தாழ்வை நோக்கிய என் வாழ்வு
தளர்ந்து போனது சில காலம்

"ஞாலம் துலக்க போகின்றேன்
ஞானம் தேடி போகின்றேன்
காலம் முழுதும் வாழும்
கவிதை தேடி போகின்றேன்" (என)

புலம்பி திரிந்தது ஒரு காலம்
புகழ்ச்சி ருசித்தது ஒரு காலம்
கலகம் தெளிந்தது ஒரு காலம்
கனவுகள் கலைந்தது ஒரு காலம்

காதல் ரசித்தது ஒரு காலம்
காற்றை ரசித்தது ஒரு காலம்
சாதல் கூட ரசிக்க தக்கது
சரியாய் கண்டது இக்காலம்

அமுதினும் இனிது உலகறிவேன்
அதைத்தான் நானும் வெறுக்கின்றேன்
சமுத்திரம் மோதும் கரையோரம்
சவமாய் ஒதுங்க துடிக்கின்றேன்!

1 comment:

vanathi81 said...

நிராசைகளால் நீங்கள் நிராகரிக்க பட்டாலும்,
நம்பிக்கைகள் நல்ல வாழ்க்கைக்கு வழி கொடுக்கும்.

Post a Comment