எனக்கும் உனக்குமான உறவை..
உதாசீனம் செய்வதே
உன் உள்ளம் மட்டும் தான்!
பூங்கொத்துக்களோடு வரவேற்கவேண்டியவள் –
பூத கணங்களோடு எதிர்கொள்கிறாள்
அன்பால் செய்யவேண்டியதை எல்லாம் –
அகங்காரத்தால் செய்து தொலைக்கிறாள்
தன்னை நோக்கி
தாவி வரும் மழை
துளியை –
பாலைவனம் –
தன் வெப்பம்
கொண்டு
தானே கொல்வது போல;
உன்னை நோக்கி
வரும்போதெல்லாம் –
உடைத்து
விளையாடுகிறாய் –
உணர்விழந்த என்
உள்ளத்தை!
ஒளிமயமாக
திகழவேண்டிய என் வாழ்வு –
உன்னால் –
பழிமயமாக படர்ந்து நிற்கிறது
மகிழ்ச்சிக்கும் உண்டோர் மரணதினம் –
எனின் –
இகழ்ச்சிக்கு உண்டோ ஒரு இறந்ததினம்?
என்னை நோக்கும்
எல்லா இதழ்களிலும் –
புகழ்ச்சிக்கு
பதில் இகழ்ச்சியே.. உட்கார்ந்திருக்கிறது...
இறுமாப்புடன்
அன்பால் அழிந்தவனுக்கு –
அடியேன் மட்டுமே ஆதாரம்!
தொழுபவனும், நிந்திப்பவனும்
கடவுளையே
சதா சர்வ காலமும் நினைத்து கொண்டிருப்பது மாதிரி
எனக்கு
எப்போதுமே உன்
ஞாபகம் தான்....
ஞாபகம் என்பது
பயத்தின் மறுபெயர் ஆனால்!
No comments:
Post a Comment